குவாட் கூட்டத்தை நடத்துவது பற்றி அமைச்சர் ஜெய்சங்கர்-மைக் போம்பியோ ஆலோசனை

சீனாவுடனா பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், குவாட் எனப்படும் 4 நட்பு நாடுகளின் கூட்டத்தை விரைவில் நடத்துவது குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோவும் விவாதித்துள்ளனர்.
தொலைபேசி வாயிலாக நேற்றிரவு நடந்த இந்த ஆலோசனை குறித்து ஜெய்சங்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுபற்றி அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், இந்திய-சீன எல்லை பிரச்சனை மற்றும் தென் சீன கடலில் சீனாவின் ஆதிக்கத்தை மறைமுகமாக குறிப்பிட்டு, இந்த பிராந்தியத்தில் நடந்த நிலைகுலையவைக்கும் செயல்களை சமாளிப்பது பற்றி இரு நாட்டு அமைச்சர்களும் விவாதித்ததாக தெரிவித்துள்ளது.
குவாட் சந்திப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்கும். அதே நேரம் இந்த சந்திப்பை சந்தேக கண்ணுடன் சீனா பார்த்தாலும், எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என இந்திய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
Comments