தங்க நகைகளின் மதிப்பில் 90சதவிகிதம் வரை கடன் பெறலாம் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு

தங்க நகைகளின் மதிப்பில் 90 விழுக்காடு வரை நகைக் கடன் வழங்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கொரோனா சூழலில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளைக் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக வேளாண் பயன்பாட்டுக்கு இல்லாமல் மற்ற வகைகளுக்காகத் தங்க நகைகளை அடகு வைத்துக் கடன் பெறுவதற்கான மதிப்பை 75 விழுக்காட்டில் இருந்து 90 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
இந்தத் தளர்வு அடுத்த ஆண்டு மார்ச் இறுதிவரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தத் தளர்வு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், தங்க நகைக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளது. தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால் வேளாண் பயன்பாட்டுக்கு அல்லாமல் மற்ற வகைகளில் தங்க நகைகளை வங்கிகளில் அடகு வைத்துக் கடன் பெறுவதும் அதிகரித்துள்ளது.
Value for loans up to 90% will be provided for the jewellery (#gold) sector, says RBI governor Shaktikanta Das after MPC meet #RBIpolicy
— moneycontrol (@moneycontrolcom) August 6, 2020
LIVE updates: https://t.co/MB2Xmwhwit pic.twitter.com/yrnxgAkSVB
Comments