அயோத்தி கோயில் முதல் பிரசாதம்... 'ஏழை ' மகாவீருக்கு இன்ப அதிர்ச்சியளித்த யோகி ஆதித்யநாத்

0 11378

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆகஸ்ட் 5- ந் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும் ராமரின் ஆசியை பெறும் வகையில், பக்தர்களின் வீடுகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அயோத்தியை சேர்ந்த ராம பக்தர் மகாவீர் குடும்பத்துக்கு ராமர் கோயிலின் முதல் பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டது.

மாகவீர் தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தை சேர்ந்தவர். அயோத்தி நகரில் சூதாத்தி என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2019- ம் ஆண்டு பொது தேர்தலில் யோகி பிரசாதத்தில் ஈடுபட்ட போது, இவரின் வீட்டில்  உணவு அருந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவுப்படி முதல் பிரசாதம் மகாவீர் குடும்த்தாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராமர் கோயில் பிரசாதம் என்பது லட்டு, துளசிமாலை அடங்கியது. துளசிதாசர் எழுதிய ராமர்சரித்திரம் குறித்த பாடல்கள் அடங்கிய புத்தகமும் மாகவீர் குடும்பத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அயோத்தி கோயிலின் கட்டுமான நிகழ்ச்சியின் முதல் பிரசாதம் தங்கள் குடும்பத்துக்கு வழங்கப்பட்டுள்ளதால், மாகாவீர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், '' எங்கள் வீட்டில் யோகி ஆதித்யநாத் உணவு சாப்பிட்டுள்ளார். அந்த பழக்கத்தை மறக்காமல் ராமர் கோயிலின் முதல் பிரசாதத்தை எங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். யோகி ஆதித்யநாத் ஆட்சியில் சாதி பேதங்கள் மறைந்து விடும்'' என்று தெரிவித்துள்ளார்.

மாகவீர் குடும்பத்துக்கு பிரசாதம் வழங்கப்பட்டதை தொடர்ந்தே அயோத்தியின் மற்ற மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments