கைவிடப்பட்ட கப்பல்; உரிமையாளரின் அதிக பண ஆசை! பெய்ரூட் விபத்துக்கு முதல் காரணம் யார்?

0 17617

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் 6 ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்த அம்மோனியர் நைட்ரேட் வெடித்து சிதறியதால் 145 பேர் இறந்தனர் . கிட்டத்தட்ட 5000 பேர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த 2013- ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரஷ்யாவின் ஜார்ஜியாவிலிருந்து Rustavi Azot LLC என்ற நிறுவனத்திலிருந்து மொசாம்பிக் நாட்டை சேர்ந்த Fabrica de Explosivos என்ற நிறுவனத்துக்கு அம்மோனியம் நைட்ரேட்டை ஏற்றிக் கொண்டு Rhosus என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது. ரஷ்ய தொழிலதிபர் Igor Grechushkin என்பவர் நடத்தி வந்த  Teto Shipping நிறுவனத்துக்கு இந்த கப்பல் சொந்தமானது. கப்பலின் கேப்டனாக போரீஸ் புரேகோஷேவ் என்பவர் இருந்துள்ளார். நான்கு வாரங்கள் கழித்து ஏதென்ஸ் நகருக்கு இந்த கப்பல் வந்துள்ளது. அங்கிருந்து மொசாம்பிக் நோக்கி பயணித்து கொண்டிருக்கையில், அதன் உரிமையாளர் கப்பல் கேப்டனை அழைத்து பெய்ரூட் சென்று அங்கிருந்து கனரக சரக்குகளை ஏற்றி கொண்டு ஜோர்டானிலுள்ள ஆஹாபா துறைமுகத்தில் சேர்க்க உத்தரவிட்டுள்ளார்.

இதனால், மத்திய தரைக்கடல் வழியாக பயணித்து Rhosus கப்பல் பெய்ரூட் சென்றுள்ளது. அப்போது, கூடுதல் சரக்குகளை ஏற்றுவதில் உள்ள தொழில்நுட்ப பிரச்னையால் பெய்ரூட் துறைமுக அதிகாரிகள் கப்பலை பறிமுதல் செய்துள்ளனர். கப்பல் உரிமையாளரும் துறைமுக கட்டணம் செலுத்த மறுத்துள்ளார். பிறகு கப்பல் உரிமையாளர் அந்த கப்பலை அப்படியே விட்டு விட்டார். இதனால்,கப்பலிலிருந்து 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பு காரணங்களுக்காக துறைமுகத்திலுள்ள 12ம் எண் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டது. கப்பல் கேப்டன் போரிஸ் புரேகோஷேவ் உள்ளிட்ட ஊழியர்கள் 11 மாதங்கள் பெய்ரூட்டில் சட்டப் பேராட்டம் நடத்தி, பிறகு, விடுவிக்கப்பட்டனர். கப்பல் அப்படியே கை விடப்பட்டது. இந்த கப்பல் மட்டும் பெய்ரூட் நகருக்கு செல்லாமலிருந்திருந்தால், இப்படி ஒரு விபத்தே நடந்து இருக்காது. ஆனால், கப்பல் உரிமையாளரின் பண ஆசை காரணமாக பிரச்னையில் சிக்கி 145 உயிர்கள் பலியாகி விட்டது. image

ரஷ்யாவின் சோச்சி நகரில் தற்போது வசித்து வரும் ரோஸஸ் கப்பல் கேப்டன் போரீஸ் புரேகோஷேவ் கூறுகையில், '' விபத்தில் இறந்தவர்களுக்காக நான் வருத்தமும் வேதனையும் தெரிவித்துக் கொள்கிறேன். பெய்ரூட் துறைமுகத்தில் ரோடு ரோலர்கள் உள்ளிட்ட சில கனரக வாகனங்களி  ஏற்றி செல்ல எங்களுக்கு உத்தரவிடப்பட்டது. கப்பலும் பழையது. ஆனால், கப்பல் உரிமையாளர் எடுத்த முடிவுல்தான் நாங்கள் பெய்ரூட் செல்ல வேண்டிய நிர்பந்தம் உருவானது.  கப்பல் பிடிபட, பெய்ரூட்டில் எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. ரஷ்ய அதிபர் புதினுக்கு கடிதம் எழுதியும் எந்த பலனுமில்லை. சட்டப் போராட்டத்துக்கு பிறகு எங்களை விடுவித்தனர். கையில் பணமும் இல்லை. சம்பளமும் கிடைக்கவில்லை. அதையெல்லாம் விட இப்போது சேமித்து வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்து பெய்ரூட் நகரத்தில் ஏராளமான மக்கள் உயிரிழந்துளந்தது மிகுந்த வேதனை தருகிறது. இந்த விபத்துக்கு காரணமாணவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் '' என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments