இந்தி தொலைக்காட்சி நடிகர் சமீர் சர்மா திடீர் மரணம்

0 1902

இந்தி தொலைக்காட்சி நடிகர் சமீர் சர்மா இறந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அவருக்கு வயது 44. லெப்ட் ... ரைட்... லெப்ட், கஹானி கர் கர் கி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும், பல திரைப்படங்களிலும் நடித்துள்ள சமீர் சர்மா, மும்பையின் மலாட் பகுதியில் உள்ள அகின்ஸா மார்க் என்ற இடத்தில் குடியிருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அவர் வீட்டுக்குள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். சமீரின் மரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், உடற்கூறாய்வு வந்த பின்னர் முடிவுகள் தெரியவரும் என மலாட் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments