பாகிஸ்தானைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக துருக்கி செயல்பட்டு வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை..!

பாகிஸ்தானைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளின் மையமாக துருக்கி செயல்பட்டு வருவதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளின் மையமாக துருக்கி செயல்பட்டு வருவதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஓராண்டு முடிவடைந்த நிலையில், மத்திய அரசின் நடவடிக்கையால், காஷ்மீரில் அமைதியோ ஸ்திரத்தன்மையோ ஏற்படவில்லை என துருக்கி கருத்து தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக துருக்கியும், அதன் அதிபர் எர்டோகன் குடும்பமும் ஈடுபட்டு வருவதை, வலுவான ஆதாரங்களுடன் தேசிய பாதுகாப்பு அமைப்பிடம், உளவுத் துறை வழங்கியுள்ளது.
காஷ்மீர் மக்களையும், மாணவர்களையும் திரட்டி இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், கல்வி மையங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை துருக்கி பயன்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments