இலங்கை தேர்தலில் வெற்றி.. மீண்டும் பிரதமராகிறார் ராஜபக்சே..!

0 4637

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மகிந்த ராஜபட்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன கட்சி (Sri Lanka Podujana Party) மிகப்பெரும் வெற்றி பெற்றிருப்பதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 225 இடங்களில் மகிந்த ராஜபட்சவின் கட்சி 145 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு திருத்தம் செய்ய 150 இடங்கள் தேவையாகும். இதற்கு ராஜபட்ச கட்சிக்கு 5 இடங்களே குறைவாக உள்ளன. முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை.

அவரது கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சஜித் பிரேமதேசாவால் ஆரம்பிக்கப்பட்ட சமாகி ஜன பாலவேகியா (Samagi Jana Balavegaya) கட்சி 54 இடங்களில் வென்று முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. தமிழ் தேசிய கூட்டணி 10 இடங்களிலும், 2 சிறிய தமிழ் கட்சிகள் தலா 2 இடங்களிலும் வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments