நீரவ் மோடியின் காவலை ஆகஸ்ட்27 வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவு

0 669

இந்தியாவில் வங்கி மோசடி செய்து விட்டு தப்பி ஓடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் காவலை வரும் 27ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடியும் மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சியும் 13,000 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றனர்.

லண்டனில் தலைமறைவாக இருந்த நீரவ் மோடி கைது செய்யப்பட்டு வாண்ட்ஸ் ஒர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.தற்போது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடந்துவரும் அவர் ஜாமீன் தொடர்பான வழக்கு நீதிபதி வனேசா பிரசர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை காணொலி காட்சி மூலம் விசாரித்த நீதிபதி நீரவ் மோடியின் காவலை வரும் 27ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments