மதரீதியாக மக்களை தூண்டிவிடுவதை பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும் - இந்திய வெளியுறவுத்துறை

0 1203

இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதையும், மதரீதியாக மக்களை தூண்டிவிடுவதையும் பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும் என வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நடைபெற்ற நிலையில், இந்தியாவில் சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் பாகிஸ்தான் தெரிவித்து இருந்தது.

இதற்கு பதிலளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளரான அனுராக் ஸ்ரிவஸ்தவா, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தூண்டி விடும் பாகிஸ்தானின் இந்த கருத்து ஆச்சரியம் அளிப்பதாக இல்லை என்றார். தனது நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு உரிமைகள் வழங்க மறுக்கும் பாகிஸ்தான் இவ்வாறு கூறுவது மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments