ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா

0 15126

ஆந்திர மாநிலம் ராஜம் பாளையத்தில் அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபால்புரம் தொகுதி எம்.எல்.ஏ.வான வெங்கட்ராவ், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோயில் கட்ட முடிவு செய்து, வேத மந்திரங்கள் முழங்க பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது, மக்கள் கேட்காமலேயே ஜெகன் மோகன் ரெட்டி பல நலத்திட்ட உதவிகளை செய்து வருவதாகவும், அதனால் வருங்கால தலைமுறையினரும் நினைவு கூறும் விதமாக ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோயில் கட்டவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பூமி பூஜை நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் கோயில் எழுப்பப்படும் என்றும் எம்.எல்.ஏ. வெங்கட்ராவ் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments