துருக்கியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

துருக்கியில், பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் சட்டங்களை கடுமையாக்கும்படி நூற்றுக்கணக்கான பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துருக்கியில், பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் சட்டங்களை கடுமையாக்கும்படி நூற்றுக்கணக்கான பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும், பாலின சமத்துவத்தை நிலைநாட்டவும் சில புதிய சட்டங்களை கடந்த 2011 ஆம் ஆண்டு, துருக்கி அரசு இயற்றியது. இதற்கு சில பழமைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அச்சட்டங்களை ரத்து செய்வது குறித்து அதிபர் Tayyip Erdogan பரிசீலித்து வந்தார்.
இந்நிலையில், Pinar Gultekin என்ற கல்லூரி மாணவி தன் காதலனால் எரித்துக் கொல்லப்பட்டதால், பெண்களின் பாதுகாப்பை உறுதி படுத்தும் சட்டங்கள் தொடர்ந்து அமலில் இருக்க வலியுறுத்தி ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments