வியட்நாமில் நாள் ஒன்றுக்கு 4.50 கோடி முகக்கவசங்கள் தயாரிப்பு

0 924
வியட்நாமில் கொரோனா பரவலுக்கு பிறகு நாள் ஒன்றுக்கு 4 கோடி 50 லட்சம் முகக்கவசம் தயாரிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வியட்நாமில் கொரோனா பரவலுக்கு பிறகு நாள் ஒன்றுக்கு 4 கோடி 50 லட்சம் முகக்கவசம் தயாரிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் கொரோனா தொற்றால் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு கட்டுப்பாடு, பரவலான பரிசோதனைகளால் நோய் பரவல் கட்டுக்குள் இருந்த நிலையில், முக்கிய சுற்றுலாத் தளமாக டானாங்கை மையமாக கொண்டு கடந்த மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதனால் ஏ அண்ட் பி மினிகோ என்ற நிறுவனம் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் முகக்கவசங்களை தயாரிப்பதாகவும் அமெரிக்கா, கனடா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு 5 கோடி முகக்கவசங்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments