இந்த ஆண்டில் நாட்டிலேயே அதிகபட்சமாக அவலாஞ்சியில் 58 செமீ மழை பெய்துள்ளது-வானிலை மையம்

0 3343

இந்த ஆண்டில் நாட்டிலேயே அதிகபட்ச மழை அளவாக, கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 58 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதே மாவட்டத்தின் ஜ.பஸாரில் 33 சென்டி மீட்டரும், அப்பர் பவானியில் 32 சென்டி மீட்டரும் மழை பதிவானது.

கோவை மாவட்டம் சின்னக்கல்லார், சோலையாரில் தலா 11 சென்டி மீட்டரும், வால்பாறையில் 7 சென்டி மீட்டரும் தேனி மாவட்டம் பெரியாறில் 5 சென்டி மீட்டரும் மழை பெய்தது. நெல்லை மாவட்டம் பாபனாசம் மற்றும் உதகமண்டலத்தில் தலா 4 சென்டி மீட்டர் மழை பதிவானது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம், குமரி மாவட்டம் கொட்டாரம், பெருஞ்சாணியில் தலா 3 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்காசி மற்றும் செங்கோட்டையில் தலா 2 சென்டி மீட்டரும், குமரி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் தலா ஒரு சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments