”நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்தி மத்தியில் லவ் ப்ரபோசல்”.. பற்றி எரிந்த காதலன் வீடு..!

0 4055

இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்தி விளக்குகள் சூழ, பெண் தோழியிடம் காதலை சொன்ன நபரின் வீடு தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் அரங்கேறி உள்ளது.

சவுத் யார்க்ஷயர் என்ற இடத்தில் தனது பெண் தோழியிடம் காதலை சொல்வதற்கான சூழலை உருவாக்க வீடு முழுவதும் மெகுழுவர்த்தி மற்றும் விளக்குகளை பிரிட்டிஷ்காரர் ஒருவர் ஏற்றி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

காதலை சொல்லும் போது எதிர்பாராத விதமாக மெழுகுவர்த்தி கீழே விழுந்ததன் மூலம் வீடு தீப்பற்றியதாக சொல்லப்படுகிறது. தகவலறிந்து 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். சேதமடைந்த வீட்டின் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments