மேம்பாலத்தில் இருந்து குதித்த நபர், இரும்புக் கம்பிகள் மீது விழுந்து உயிருக்கு போராட்டம்

0 2054
மதுரை ஆரப்பாளையம் மேம்பாலத்தின் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நபர், இரும்பு கம்பிகளில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில், நீண்ட முயற்சிக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

மதுரை ஆரப்பாளையம் மேம்பாலத்தின் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நபர், இரும்பு கம்பிகளில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில், நீண்ட முயற்சிக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த கண்ணன் அதிகாலையில் ஆரப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

பாலத்தின் கீழ் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கிருந்த கட்டுமான இரும்புக் கம்பிகள் மீது கண்ணன் விழுந்ததில், வயிறு உள்ளிட்ட உடம்பின் பல்வேறு இடங்களில் கம்பிகள் குத்தியது.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் தந்த தகவலின்பேரில் வந்த தீயணைப்பு வீரர்கள் இரும்பு கம்பிகளை வெட்டி எடுத்து கண்ணனை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பப் பிரச்சனையால் கண்ணன் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments