சிறு பறவைக்காக தனது காரினை விட்டுக் கொடுத்த துபாய் இளவரசர்

முல்லைக்கு தேர் கொடுத்த பாரி போல, பறவை கூடுக்கட்டி வாழ தனது காரை கொடுத்த துபாய் பட்டத்து இளவரசருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அந்நாட்டின் பட்டத்து இளவரசராகவும், நிர்வாக கவுன்சில் தலைவருமாக இருப்பவர் ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம்.
மற்ற உயிரினங்கள் மீது அன்பு பாராட்டி வரும் ராஷித் விலங்கியல் பூங்காவில் ஏராளமான விலங்குகளைத் தத்தெடுத்துள்ளார். இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இவர் தனது காரினை ஓரமாக நிறுத்தி வைத்திருந்தார்.
அந்தக் காரின் முகப்புப் பகுதியில் சிறிய பறவை ஒன்று கூடுகட்டி, முட்டையிட்டு அடைகாத்து வருகிறது. இதனைக் கண்ட ராஷித், குறிப்பிட்ட காரினைப் பயன்படுத்தாமல் விட்டு விட்டார். ஒரு சிறு பறவைக்காக தனது காரையே அளித்த பட்டத்து இளவரசரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வரைலாகி வருகிறது.
VIDEO: Sheikh Hamdan cordons off SUV after bird builds nest on it https://t.co/0UI2Ovyfe2
— Gulf Today (@gulftoday) August 5, 2020
Comments