சினிமா குடும்பத்திலிருந்து சிவில் சர்வீஸ் பணி... காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஐ.ஏ,எஸ் தேர்வில் வெற்றி!

0 39756
காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் மற்றும் ஸ்ருதன் ஜெய்

மிழகத்தின் பிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, அகில இந்திய அளவில் 75 - வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவர் சின்னி ஜெயந்த். 1980 - 90 -ஆம் ஆண்டுகளில் பிசியான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர். குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துபவர். இவர் ரஜினி, கமல் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 'உனக்காக மட்டும் ' என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் சின்னி ஜெயந்த்.இவரின் மகன் ஸ்ருதன் ஜெய் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அதோடு, 75வது இடத்தையும் பிடித்துள்ளார். 

இது குறித்து சின்னி ஜெயந்த், “முதல் முறை எழுதிய தேர்வில் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் இரண்டாவதாகத் தேர்வு எழுதி என் மகன் வெற்றி பெற்றுள்ளார். இது எனக்கு பெருமைமிக்க தருணம்” என்று கூறியுள்ளார்.சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஸ்ருதன் ஜெய்க்கு பல தரப்பிலுமிருந்து பாராட்டு குவிந்து வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments