தமிழ்நாட்டில் ஆக.10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க முதலமைச்சர் அனுமதி

0 5735
உடற்பயிற்சி கூடங்களுக்கான நிலையான வழிகாட்டு செயல்முறைகள் தனியாக வெளியிடப்படும்

தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் தனியார் உடற்பயிற்சி கூடங்கள் இயங்குவதற்கு அனுமதியளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று, முதலமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி வரும் 10ம் தேதி முதல் தனியார் உடற்பயிற்சி கூடங்கள், 50 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான நிலையான வழிகாட்டு செயல் முறைகள் தனியாக வெளியிடப்படும் என்றும், அவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments