மாடலிங் டு கலெக்டர்: முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் முத்திரை பதித்த டெல்லி பெண்

0 16756
ஐஸ்வர்யா ஷ்யோரன்

மாடலிங்கில் ஈடுபட்டு வந்த டெல்லியை சேர்ந்த  ஐஸ்வர்யா ஷ்யோரன், தான் எழுதிய முதல் சிவில் சர்வீசஸ் தேர்விலேயே 93 - வது ரேங்க்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஐஸ்வர்யா ஷ்யோரன் டெல்லியில் உள்ள  ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் பொருளாதாரம் படித்து இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பிறகு, இந்தூர் ஐ.ஐ.எம்- மில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரி காலத்திலிருந்தே மாடலிங்கில் ஈடுபட்டு வருகிறார், ஐஸ்வர்யா. 2015 - ம் அண்டு நடைபெற்ற டெல்லி பிரஷ் ஃபேஸ் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றார்.  2016 - ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் போட்டியின் இறுதி போட்டி வரை முன்னேறினார். 

image

மாடலிங் துறையில் பணிபுரிந்துவந்தாலும் ஐஸ்வர்யாவுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி அரசுப்  பணிக்குச் செல்லவேண்டும் என்பது ஆசை. அந்தக் கனவை நிறைவேற்ற, கடந்த பத்து மாதங்களாகத் தேர்வுக்குத் தயாரானார். இதற்காக, எந்தவிதமான தனிப் பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லவில்லை. வீட்டிலேயேதான் படித்தார். இந்த நிலையில், நேற்று வெளியான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவில் ஐஸ்வர்யா  93 - வது ரேங் பெற்று பாஸாகியுள்ளார். 


சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றது குறித்து ஐஸ்வர்யா கூறுகையில் '' ஐஸ்வர்யா ராய்க்குப் பிறகு நானும் மிஸ் இந்தியாவாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். மிஸ் இந்தியா போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறினேன். ஆனாலும் சிவில் சர்வீஸ் தேர்வு பாஸாக வேண்டுமென்பது என் கனவு.  தொடர்ந்து சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாரானேன். இதற்காக நான் எந்தவித பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லவில்லை. செல்போன், சமூக வலைத்தளங்கள் என அனைத்தையும் அனைத்து ஒதுக்கி  வைத்துவிட்டு தீவிரமாகப் படித்தேன். எளிதில் வெற்றி பெற்றுவிட்டேன்” என்கிறார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments