தமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா, 108 பேர் உயிரிழப்பு..!

0 4874
தமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா, 108 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு..!

தமிழகத்தில் மேலும் 5063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 68 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 108 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 4,349ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 6501 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டதால்,  இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஒரே நாளில் 55,122 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தனிமைப் படுத்தப்பட்டவர்கள் உள்பட 56 ஆயிரத்து 698 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகள், மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்த மேலும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

சென்னையில் மேலும் 1023 பேருக்கும், விருதுநகரில் புதிதாக 424 பேருக்கும், திருவள்ளூரில் 358 பேருக்கும், தேனியில் 292 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments