பிளஸ் 1 மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் , மதிப்பெண் மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - தேர்வுத்துறை

0 1480
தமிழகம் முழுவதும் பிளஸ் 1 மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறவும், மதிப்பெண் மறுகூட்டல் செய்யவும் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 1 மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறவும், மதிப்பெண் மறுகூட்டல் செய்யவும் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி கூறியுள்ளார்.

இதுதொடர்பான அறிக்கையில், பிளஸ்1 மாணவர்கள், பிளஸ் 2 மறு தேர்வர்கள் தங்களின் இணைய மதிப்பெண் பட்டியலை பள்ளியிலும், தேர்வெழுதிய  மையத்திலும் நாளை முதல்  பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல், மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு பிளஸ் 1 மாணவர்கள்  ஆகஸ்ட் 5 முதல்12-ம் தேதி வரையும், பிளஸ் 2 மறுதேர்வர்கள் ஆகஸ்ட் 5, 6, 7-ம் தேதிகளிலும் பள்ளிகள், தேர்வெழுதிய மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள் நகல் பெற எல்லா பாடங்களுக்கும் 275ரூபாயும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்போர் உயிரியல் பாடத்துக்கு 305ரூபாயும், இதர பாடங்களுக்கு 205ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments