சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு... ராகுல் மோடி பாஸ்!

0 15946

சிவில் சர்வீஸ் தேர்வில் ராகுல் மோடி வெற்றி பெற்றுள்ளார்.

அரசியல்ரீதியாக பிரதமர் மோடியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அவ்வப்போது மோதிக் கொண்டிருப்பார்கள். ராகுல் காந்தி பிரதமர் மோடியை கூடுதலாகவே விமர்சிப்பார். பிரதமர் மோடி அவ்வளவாக ராகுலை கண்டு கொள்ள மாட்டார்.

பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் எதிரும் புதிருமாக இருந்தாலும் இருவரின் பெயரையும் சேர்த்து வைத்துக் கொண்டுள்ள ஒருவர் இப்பொழுது யு.பி எஸ்.சி தேர்வில் பாஸாகியுள்ளார்.

இதனால், இந்தியா முழுவதும் அவர் பாப்புலராகியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதத்தில் யு.பி.எஸ்.சி தேர்வுகள் நடைபெற்றது. இதன் முடிவு இன்று வெளியாகியுள்ளது. அதில், அகில இந்திய அளவில் 420- வது இடம் பெற்றவரின் பெயர் ராகுல் மோடி.

இந்தியாவின் இரு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் பெயரை சேர்த்து வைத்துக் கொண்டிருப்பதால் ராகுல் மோடி ஒரே நாளில் பிரபலமாகியுள்ளார். ராகுல் மோடியின் ரோல் எண் 6312980

யு.பி.எஸ்.சி தேர்வில் அகில இந்திய அளவில் பிரதீப் சிங் முதலிடத்தையும் மாணவிகளில் பிரதீபா வெர்மாவும் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments