பிரதமர் மோடியிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு

பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய,திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். '
இது தொடர்பாக ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், பிரதமர் மோடியிடம் தான் தொலைபேசி வாயிலாகப் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார். அப்போது, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு நடந்ததைச் சுட்டிக் காட்டி உள்ளார்.
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்று நீதிமன்றம் கூறியதையும் அவர் குறிப்பிட்டுளளார்.
அதற்காக மத்திய - மாநில அரசுகளின் சுகாதாரத் துறை அதிகாரிகள், இந்திய மருத்துவக் கவுன்சில் என மூத்தரப்புக் குழு அமைத்து, கலந்தாலோசித்து இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று மோடியிடம் கேட்டுக் கொண்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Comments