புதிய வான்தடத்தை உருவாக்கி போதைப் பொருள் கடத்திய கும்பல்

ஆஸ்திரேலியாவில் புதிய வான் தடத்தை உருவாக்கி, விமானம் மூலம் போதைப்பொருள் கடத்திய சம்பவம் அந்நாட்டு காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த மாதம் 26ம் தேதி ஆஸ்திரேலியாவின் போர்ட் மூரஸ்பி என்ற இடத்திலிருந்து பப்புவா நியூ கினியாவிற்கு சென்ற சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், வழக்கமான வான் பாதைகளை விட்டு, கடத்தல்காரர்கள் தாங்களாகவே புதிய வான் பாதையை உருவாக்கி, போதைப்பொருள் கடத்தியது தெரியவந்தது.
மேலும் ரேடார்களின் கண்காணிப்பில் சிக்காமல் தவிர்ப்பதற்காக விமானத்தை மூவாயிரம் அடிக்கும் கீழாக பறக்கச் செய்ததும், சிறிய விமானத்தில் அதிக எடை கொண்ட போதைப்பொருளை ஏற்றியதால் அந்த விமானம் விபத்துக்குள்ளானதும் தெரிய வந்தது. இந்நிலையில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Comments