அடுத்த 5 ஆண்டுகளில் ஆயுத உற்பத்தியை இரு மடங்காக்க இலக்கு

0 5818
அடுத்த 5 வருடங்களில் ஆயுத ஏற்றுமதியை இரண்டு மடங்காக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சகம் புதிய சட்டவரைவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அடுத்த 5 வருடங்களில் ஆயுத ஏற்றுமதியை இரண்டு மடங்காக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சகம் புதிய சட்டவரைவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலக அளவில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின்  பட்டியில் இந்திய முதல் மூன்று இடங்களில் உள்ளது. இந்நிலையில், ராணுவத் தளவாடங்களில் தற்சார்பு அடைவது மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பது ஆகிய நோக்கில், வலுவான பாதுகாப்புத் தொழில்துறை தளத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய வரைவு அறிக்கையில், ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு உள்நாட்டு ஆயுத உற்பத்தியை அதிகரிக்கவும், அதில் 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஆயுதங்கள் மற்றும் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments