இந்திய ராணுவ வீரரை தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என ராணுவம் சந்தேகம்

0 4314
ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் இருந்து நேற்று காணாமல் போன இந்திய ராணுவ வீரர், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என ராணுவம் சந்தேகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் இருந்து நேற்று காணாமல் போன இந்திய ராணுவ வீரர், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என ராணுவம் சந்தேகம் தெரிவித்துள்ளது.

162 ஆவது பட்டாலியனை சேர்ந்த ரைபிள்மேன் ஷாகிர் மன்சூர் என்பவர், ஈத் கொண்டாட்டம் தொடர்பாக தமது குடும்பத்தினருடன் நேற்று மாலை வெளியே சென்றார். அதற்குப் பின் அவரை காணவில்லை.

அவரது கார் எரிக்கப்பட்ட நிலையில் ஓரிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை தேடும் முயற்சிகள் வெற்றி பெறாத நிலையில் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என இந்திய ராணுவத்தின் சினார் கோர் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments