மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு? அமைச்சர் பதில்

0 3652

தமிழகத்தில் மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கிட வேண்டும் என்ற கோரிக்கை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றில் இருந்து மீண்டப் பின் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் முதன்முறையாக அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பல ஆண்டாக 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டு வருவதாகவும் ஊரடங்கு காலத்தில் பெரும்பாலானவர்கள் வீட்டில் இருப்பதால் பயன்பாடு அதிகரித்து மின் கட்டணமும் உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments