சீன அச்சுறுத்தலை எதிர்கொள்ள, லடாக்கில் 15,000 வீரர்களை குவித்தது இந்தியா..!

0 4106
லடாக்கின் வடக்கு பகுதியில் சீன அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களையும், டாங்கி படைப் பிரிவுகளையும் இந்தியா குவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லடாக்கின் வடக்கு பகுதியில் சீன அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களையும், டாங்கி படைப் பிரிவுகளையும் இந்தியா குவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கால்வன் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தால் ஏற்பட்ட பதற்றத்தை தணிப்பது குறித்தும்,  படை விலக்கல் குறித்தும் இருநாடுகளும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. 

இருப்பினும் தெளலத் பெக் ஓல்டி, தேப்சாங் சமவெளிகளில் (Daulat Beg Oldi and Depsang plains) 17 ஆயிரம் படை வீரர்களையும், கவச வாகனங்களையும் ஏப்ரல், மே மாதங்களில் கொண்டு வந்து சீனா நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து சீன அச்சுறுத்தலை  எதிர்கொள்ள காரகோராம் பாஸ் (Karakoram Pass ) அருகே  தரைமார்க்கமாகவும், வான் மார்க்கமாகவும் படை வீரர்களையும்,  டி-90 டாங்கிகளையும் இந்தியா  குவித்திருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments