ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடனான சண்டையில் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட 24 பேர் பலி

0 849
ஆப்கானிஸ்தானில் சிறை தகர்ப்பில் ஈடுபட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகளுடனான சண்டையில் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட 24 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானில் சிறை தகர்ப்பில் ஈடுபட்ட  ஐ.எஸ் பயங்கரவாதிகளுடனான சண்டையில் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட 24 பேர் பலியாகினர்.

நங்கார்ஹர் மாகாண (Nangarhar) தலைநகர் ஜலாலாபாத்தில் (Jalalabad) உள்ள சிறையில் 2 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த சிறை வாயிலில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை  மோதி வெடிக்க செய்து நேற்று மாலை 30 பேர் உள்ளே புகுந்தனர்.

இதையடுத்து நேற்றிரவு முதல்  இருதரப்புக்கும்  இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த  சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட 21 பேர் பலியானதாகவும் நங்கார்ஹர் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments