மனநலம் பாதிக்கப்பட்டோரைக் கண்டறிந்து காப்பகங்களில் சேர்க்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 818
மனநலம் பாதிக்கப்பட்டுத் தெருவில் சுற்றித் திரிவோரைக் கண்டறிந்து காப்பகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டுத் தெருவில் சுற்றித் திரிவோரைக் கண்டறிந்து காப்பகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கற்பகம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மனநலம் பாதிக்கப்பட்டுத் தெருவில் சுற்றித்திரியும் பலருக்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், அவர்களுக்குப் போதிய உணவும் தங்குமிடமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டோரை முகாம்களுக்கு அனுப்பிச் சரி செய்ய உத்தரவிடக் கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நாளிதழ்களில் வந்த செய்திகளை மனுதாரரின் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். இதையடுத்து மனநலம் பாதிக்கப்பட்டோரைக் காப்பகங்களில் சேர்க்க மாவட்டந்தோறும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக ஆகஸ்டு 18ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments