பாகிஸ்தான் போர் விமானங்களை அதன் வான்பரப்பிலேயே ரபேலால் தாக்கி அழிக்க முடியும்-பீரேந்தர் சிங் தனோவா

0 3464
ரபேல் போர் விமானங்களை இந்தியா கொண்டிருப்பதால் பாகிஸ்தான் போர் விமானங்களை அதன் வான்பரப்பிலேயே தாக்கி அழிக்க முடியும் என இந்திய விமானப்படை முன்னாள் தளபதி பீரேந்தர் சிங் தனோவா தெரிவித்துள்ளார்.

ரபேல் போர் விமானங்களை இந்தியா கொண்டிருப்பதால் பாகிஸ்தான் போர் விமானங்களை அதன் வான்பரப்பிலேயே தாக்கி அழிக்க முடியும் என இந்திய விமானப்படை முன்னாள் தளபதி பீரேந்தர் சிங் தனோவா தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அவர், ரபேல் போர் விமானங்கள், எஸ் 400 ஏவுகணைகள் ஆகியவை இந்திய விமானப்படையின் வலிமையை அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் எதிரி நாடுகள் இந்தியாவின் மீது போர் தொடுக்குமுன் ஒருமுறைக்கு இருமுறை எண்ணிப் பார்க்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்தியப் பரப்புக்கு வருமுன்னரே அவற்றைத் தாக்கி அழிக்க முடியும் எனவும், தனோவா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments