தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

0 2143
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுவையில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, கோவை, நீலகிரி மலைப்பகுதிகளில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments