கழுத்தில் நைலான் கயிறு இறுக்கிய நிலையில் கரைக்கு குட்டியுடன் வந்த கடல் சிங்கம்

0 209

கழுத்தில் நைலான் கயிறு இறுக்கிய நிலையில் உயிருக்குப் போராடி வந்த கடல் சிங்கம் மீட்கப்பட்டு கயிறு அகற்றப்பட்டது.

image

சிலி நாட்டில் கால்டரா (Port of Caldera) துறைமுகத்தில் கடல் சிங்கம் ஒன்று தனது குட்டியுடன் கரைக்கு வந்திருந்தது. அப்போது அதன் குட்டியின் கழுத்தில் நைலான் கயிறு இறுக்கமாக கட்டப்பட்ட நிலையில் அழுத்தமாக பதிந்திருந்தது தெரியவந்தது. அப்போது வலி தாளாமல் கடல் சிங்கம் கத்தியபடியே இருந்தது. இதையடுத்து குட்டி கடல் சிங்கத்தை லாவகமாக பிடித்த அதிகாரிகள் கழுத்தில் சிக்கியிருந்த கயிற்றை அகற்றினர். மீனவர்கள் பயன்படுத்தும் வலையில் இருந்த நைலான் கயிறு என்பது விசாரணையின் போது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments