டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக மைக்ரோசாப்ட் ஆய்வு

0 1519
டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிக் டாக் செயலி ஏற்கனவே இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவிலும் தடை செய்யப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதனால் மாற்று வழிகளை யோசிக்க தொடங்கிய டிக் டாக்`கின் தாய் அமைப்பான பைட் டான்ஸ் நிறுவனம், டிக் டாக்`கின் அமெரிக்க செயல்பாடுகளை மட்டும் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பது குறித்து பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

ஆனாலும் டிக் டாக்குக்கு தடை விதிப்பதில் டிரம்ப் உறுதியாக இருந்ததால் அந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் மைக்ரோசாப்ட் சி.இ.ஓ. சத்ய நாதெள்ளா - அமெரிக்க அதிபர் டிரம்பை, சந்தித்துப் பேசிய பின் வெளியான அறிக்கையில், டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக ஆய்வுசெய்து வருவதாகவும், அதுகுறித்த பேச்சு வார்த்தைக்கு தயாராகி வருவதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments