சரிவுடன் தொடங்கிய இந்தியப் பங்குச்சந்தை..!

0 653
இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்றைய வணிகம் சரிவுடன் தொடங்கியுள்ளது.

இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்றைய வணிகம் சரிவுடன் தொடங்கியுள்ளது.

கொரோனா பரவல், ஊரடங்கு ஆகியவற்றால் மார்ச் மாதத்தில் இருந்து பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்து வந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளதால் மீண்டும் படிப்படியாகப் பங்குச்சந்தை வணிகம் ஏற்றம் கண்டு வருகிறது.

இந்நிலையில் இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 322 புள்ளிகள் சரிந்து 37 ஆயிரத்து 285 ஆக இருந்தது.

தேசியப் பங்குச் சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 86 புள்ளிகள் சரிந்து பத்தாயிரத்து 987 ஆக இருந்தது. மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் பங்கு விலை ஏற்றம் கண்டது. ஒருசில வங்கிகளின் பங்கு விலை 4 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments