தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை சற்றே குறைந்தது

0 2295
தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. கடந்த

தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. கடந்த

சில நாட்களாக தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து, பல புதிய உச்சங்களை எட்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒரு சவரன் ஆபரணத்தங்கம் வரலாறு காணாத வகையில் 41 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.

நேற்று 5,196 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத்தங்கம் இன்று 8 ரூபாய் குறைந்து, 5,188 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 41,568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத்தங்கம் இன்று, 64 ரூபாய் குறைந்து 41,504 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே சமயம் பார் வெள்ளி ஒரு கிலோ நேற்றைய விலையில் மாற்றமின்றி 72,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments