தனியார் தொலைக்காட்சிகளில் வகுப்புகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான திட்டம்

0 3084
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் தொலைக்காட்சிகள் வாயிலாக, இன்று முதல் வகுப்புகள் தொடங்குகின்றன.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் தொலைக்காட்சிகள் வாயிலாக, இன்று முதல் வகுப்புகள் தொடங்குகின்றன.

கொரோனா பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுடைய கல்வித் திறன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளன.

அரசு பள்ளியை பொறுத்தவரையில் ஏற்கனவே கல்வித் தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில்ம், அனைத்து மாணவர்களுக்கு இதன் பலன் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் தனியார் தொலைக்காட்சிகளின் வாயிலாக இன்று முதல் பாடங்கள் வீடியோக்கள் மூலம் நடத்தப்பட உள்ளது.

அந்த வகையில் ஒவ்வொரு தனியார் சேனலுக்கும் ஒவ்வொரு வகுப்புகள் மற்றும் காலநேரம் போன்றவை ஒதுக்கப்பட்டு, அட்டவணையாக போடப்பட்டு இன்று முதல் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது. குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் அட்டவணைப்படி தனியார் தொலைக்காட்சி மூலமாக, வீட்டிலிருந்தபடியே பாடங்களை படித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments