தேர்தல் முன்விரோதம் காரணமாக நடந்த கொலை, வன்முறை சம்பவம்-24 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு

0 988

கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக நடைபெற்ற கொலை மற்றும் படகுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 24 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

தாழங்குடா மீனவ கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணியின் தம்பி மதிவாணன், தேர்தல் முன்விரோதம் காரணமாக கும்பல் ஒன்றால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள், கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 25க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை தீ வைத்து கொளுத்தியதுடன், எதிர் தரப்பினரின் வீடுகளுக்கும் தீவைத்தனர்.

வாகனங்களையும் அடித்து உடைத்தனர். இது தொடர்பாக கலவரம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் 50க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் 5 பேர், கலவரத்தில் ஈடுபட்டதாக 19 பேர் என மொத்தமாக 24 பேரை கைது செய்து சிறையிலடைத்தனர். கொலை வழக்கில் மேலும் 12 பேரையும் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments