சுஷாந்த் ஜூன் மாதம் ஒரே வாரத்தில் 14 சிம் கார்டுகளை மாற்றியது கண்டுபிடிப்பு

0 2682
தற்கொலை செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதியிலிருந்து 14ஆம் தேதி வரை 14 சிம் கார்டுகளை மாற்றி உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதியிலிருந்து 14ஆம் தேதி வரை 14 சிம் கார்டுகளை மாற்றி உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக நடிகையும் அவரது காதலியுமான ரியா சக்கரவர்த்தி மீது பிஹார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் செயலாளர் திஷா சாலியன் தற்கொலைக்கு காரணம் என்ன என்பதையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

திஷா சாலியன் இறப்பதற்கு முன்பாக சுஷாந்திடம் பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் சுஷாந்த் யாராலோ அச்சுறுத்தப்பட்டார் என்பதையும், அதன் காரணமாகவே அவர் அடுத்தடுத்து சிம் கார்டுகளை மாற்றியதும் தெரியவந்துள்ளது- எனவே சுஷாந்த் சிங்கை அச்சுறுத்தியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments