பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு சோதனை

0 221

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறைகள் வெடித்து துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்ததையடுத்து தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி, மதுரை, மைசூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.  ரயில் தண்டவாளத்தில் சதிவேலை நடைபெற்றதாக வந்த புரளிகளை அடுத்து ரயில்வே ஊழியர்கள் தண்டவாளங்களில் சோதனைகளை நடத்தினர். சோதனைக்குப் பின்னரே ரயில்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

இதே போன்று ராமேஸ்வரத்தின் பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த தகவலை அடுத்து இரவில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் பாம்பன் பாலத்தில் சோதனை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments