திருட்டு நகைகளை விற்று.. காதலிக்கு ஜிமிக்கி, கம்மல்.. காதலனை சிக்க வைத்தது சிசிடிவி..!

0 7263
சென்னையில் வீடு புகுந்து திருடும் திருடன் ஒருவன், திருடிய நகைகளை விற்று கள்ளக் காதலிக்கு ஜிமிக்கி கம்மல் வாங்கி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. திருட்டு சம்பவம் நடந்த இடத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை பின்தொடர்ந்து திருடனை போலீசார் சுற்றி வளைத்தது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னையில் வீடு புகுந்து திருடும் திருடன் ஒருவன், திருடிய நகைகளை விற்று கள்ளக் காதலிக்கு ஜிமிக்கி கம்மல் வாங்கி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.  திருட்டு சம்பவம் நடந்த இடத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை  பின்தொடர்ந்து திருடனை போலீசார் சுற்றி வளைத்தது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை அண்ணா சாலையையொட்டி, பீட்டர்ஸ் சாலை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் அடிக்கடி வீட்டில் உள்ள தங்க நகை உள்ளிட்ட பொருட்கள், வெளியில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனங்கள் திருடு போவதாக தொடர்ந்து அண்ணா சாலை காவல்நிலைய போலீசாருக்கு புகார் வந்தது. அதே பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மூன்றாவது தளத்தில் வசிக்கும் குடும்பத்தினர், மொட்டை மாடியில் உறங்கிக் கொண்டிருக்க, அந்த சந்தர்பத்தில் வீட்டிற்குள் புகுந்த திருடன் 5 சவரன் தங்க நகை உட்பட பணம், பொருட்களை திருடிச் சென்றுவிட்டான்.

தொடர் புகாரை அடுத்து அண்ணா சாலை காவல்நிலைய போலீசார், திருட்டு நடந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமரா உள்பட 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை பரிசோதித்தனர். இதில் திருடன் ஐஸ் ஹவுஸ் பகுதியில் வேறொரு நபரை சந்திப்பதை கண்டுபிடித்து, அந்த நபரிடம் விசாரித்தனர். இதில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மேகா என்கிற மேகநாதன்தான் திருடன் என்பதை கண்டுபிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் கொரோனா காரணமாக மனைவி, குழந்தைகளை சொந்த ஊருக்கு மேகா அனுப்பியிருப்பதும், திருடிய நகைகளை தி.நகரில் உள்ள சிறிய நகை கடை ஒன்றில் விற்று விட்டு, அதில் கிடைத்த பணத்தால் பிரபல நகை கடையில் தனது தோழிக்கு, ஜிமிக்கி, கம்மல் வாங்கி தந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவனிடம் நகையை வாங்கிய கடையில் சென்று போலீசார் விசாரித்தபோது, கடைக்காரர் முதலில் மறுத்து, பின்னர் 18 கிராம் மட்டுமே வாங்கியதாக கூறியுள்ளார். சந்தேகமடைந்து சிசிடிவியை ஆய்வு செய்ததில், 5 சவரன் நகையை வாங்கிக் கொண்டு பணம் கொடுத்திருப்பது அம்பலமானது.

இந்த வழக்கில் திருடனை கண்டுப்பிடித்து, விற்கப்பட்ட நகையை மீட்டு உரியவர்களிடம் சேர்க்க சிசிடிவி கேமராதான் உதவியாக இருந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.  5 சவரன் நகை திருட்டுச் சம்பவம் நடந்த 48 மணி நேரத்திற்குள் திறம்பட செயல்பட்டு திருடனை கைது செய்த காவல் ஆய்வாளர் சந்திர மோகன் தலைமையிலான தனிப்படையினரையும் அவர்கள் பாராட்டியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments