பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் மோசடி - 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

0 8462
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடுகள் மற்றும் கழிவறைகள் கட்டாமலேயே கணக்கு காட்டி முறைகேடு செய்ததாக 4 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடுகள் மற்றும் கழிவறைகள் கட்டாமலேயே கணக்கு காட்டி முறைகேடு செய்ததாக 4 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

தலையாமங்கலம் ஊராட்சியில் 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரை பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் மற்றும் மத்திய அரசின் கழிவறை கட்டும் திட்டத்தில் 144 வீடுகள் மற்றும் 70 கழிவறைகள் கட்டாமல் போலி ஆவணங்கள் மூலம் கணக்கு காட்டி 5 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

நடிகர் வடிவேலுவின் திரைப்பட நகைச்சுவை பாணியில், அரசு கட்டிக்கொடுத்த கட்டடங்களை காணவில்லை என 22 பேர் போலீசில் புகார் அளித்த நிலையில், ஊரக வளர்ச்சி முகமை உதவித்திட்ட இயக்குநர் பொன்னியின் செல்வன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் மோசடி உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட அலுவராக இருந்த, தற்போதைய மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர்  ராஜா, உதவி பொறியாளர் சண்முக சுந்தரம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி, ஊராட்சி ஊழியர் பிரபாகரன் ஆகிய 4 பேரை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் ஆனந்த் உத்தரவிட்டார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments