நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசுவுக்கு கொரோனா

நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.பி செல்வராசு, அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார். அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச்செல்ல படலாம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், நாகப்பட்டினம் எம்.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Comments