தீரன் சின்னமலை நினைவு நாள்.. தலைவர்கள் மரியாதை..!

0 926
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி, சென்னை கிண்டியிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி, சென்னை கிண்டியிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கும், முதலமைச்சர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தீரன் சின்னமலை உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப் படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments