மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி

0 5152
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவலை அவரே வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், கொரோனா அறிகுறிகள் இருந்ததால், தாம் பரிசோதனை எடுத்ததாகவும், அதில் பாசிட்டிவ் என வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

தமது உடல்நிலை நன்றாக இருந்த போதிலும், மருத்துவர்கள் அறிவுரையின்பேரில் தாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தம்முடன் கடந்த சில நாள்களாக தொடர்பில் இருந்தோரை சுயதனிமைபடுத்தி கொள்ளும்படியும், பரிசோதனை எடுத்து கொள்ளும்படியும் அந்த பதிவில் அமித் ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments