மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி

0 1394
டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.

டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.

டெல்லியிலுள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார். எதற்காக அவர் அனுமதிக்கப்பட்டார் என்பது தெரியாமல் இருந்த நிலையில், வழக்கமான பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மதியம் 1 மணியளவில் அவர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments