வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி வரும் 4ஆம் தேதி உருவாக வாய்ப்பு

0 4027
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி வரும் 4ஆம் தேதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி வரும் 4ஆம் தேதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் தமிழகத்தில் ஆகஸ்டில் மழை குறைய வாய்ப்பு இருப்பதாகவும், மத்திய மற்றும் வட இந்திய மாநிலங்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

மன்னார் வளைகுடா பகுதி, அந்தமான் கடல் பகுதி, மகாராஷ்டிரா கடலோரப் பகுதி, மத்திய வங்கக்கடல் பகுதி, வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல்  பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும், ஆதலால் மீனவர்கள் அங்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.  குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை இரவு 11.30 மணி வரை கடல் அலை 3.5 முதல் 3.9 மீட்டர் வரை எழும்பக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments