பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும்-பாஜக வலியுறுத்தல்

0 1409
கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வெளியுறவு இணை அமைச்சர் முரளீதரன் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வெளியுறவு இணை அமைச்சர் முரளீதரன் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

டெல்லியில் தமது அரசு இல்லத்தின் முன்பு இந்த ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் நடத்துகிறார். கேரள முதலமைச்சரின் அதிகார வட்டத்தின் கீழ் இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளதாகவும், அதற்கு தார்மீக பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என முரளீதரன் கூறியுள்ளார்.

தங்க கடத்தல் வாயிலாக தீவிரவாத இயக்கங்களுக்கு பணம் போவதாக கூறப்படும் நிலையில், முழுமையான விசாரணை நடத்த ஏதுவாக முதலமைச்சர் பினராயி விஜயன் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் முரளிதர் ராவ் கூறியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments