லடாக் எல்லையில் இப்போதுள்ள படைபலத்தை தொடர இந்தியா முடிவு

0 2438
கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைப்பதற்கான அறிகுறிகள் இல்லாத நிலையில், அங்குள்ள முக்கிய பகுதிகளில், படையினரையும், டாங்குகள் மற்றும் ராணுவ தளவாடங்களையும் தொடர்ந்து நிறுத்தி வைக்க இந்தியா தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

வரவுள்ள கடுமையான குளிர் காலத்தில், மைனஸ் 20 டிகிரிக்கு குறைவான காலநிலையிலும் இப்போது உள்ள அதே எண்ணிக்கையில் இந்திய படையினர் எல்லையில் காவல் பணியில் இருப்பார்கள் என கூறப்படுகிறது.

அதே போன்று கட்டுப்பாட்டு எல்லையின் முன்களப் பகுதிகளில் இந்திய போர் விமானங்கள் அதிகபட்ச விழிப்புணர்வுடன் ரோந்து நடத்தும் என்றும், சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், இந்திய பெருங்கடலில் போர்க்கப்பல்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments