உத்தரப்பிரதேச அமைச்சர் கமல்ராணி கொரோனாவுக்கு பலி...

0 2839
கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உத்தர பிரதேச மாநில தொழில்நுட்ப கல்வித்துறை (technical education) அமைச்சர் கமல் ராணி (Kamal Rani ) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உத்தர பிரதேச மாநில தொழில்நுட்ப கல்வித்துறை (technical education) அமைச்சர் கமல் ராணி (Kamal Rani ) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

62 வயதான அவர், தலைநகர் லக்னோவில் உள்ள ராஜ்தானி மருத்துவமனையில் ஜூலை 18இல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார்.

கமல்ராணி மறைவுக்கு உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கமல்ராணி 2 முறை மக்களவை எம்பியாக இருந்துள்ளதாகவும், அமைச்சராக பணியாற்றிய காலத்திலும் கமல்ராணி சிறப்பாக பணியாற்றியதாகவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அயோத்தியில் இன்று மேற்கொள்ள இருந்த பயணத்தையும் அவர் ரத்து செய்து விட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments